தமிழ்நாடு

சென்னையில் 9 ஆயிரத்தை நெருங்கும் ஒருநாள் பாதிப்பு

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவகள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கவுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,963 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவகள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கவுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,963 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதுமே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,459 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் ஒரு நாளில் மட்டும் 8,963 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 6,25,988-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 4557 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,66,296-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 10 பேர் உயிரிழ்ந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,715ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கரோனா பாதிப்பிற்கு 50,977 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 2054, கோவை 1564, திருவள்ளூரில் 1393, காஞ்சிபுரம் 802, மதுரை 631 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT