முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம்: பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சிகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் நாளை கொண்டாடும் வகையில் அவரது சிலைகளுக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
வேதாரண்யம்: பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் நாள் நிகழ்ச்சிகள்
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் நாளை கொண்டாடும் வகையில் அவரது சிலைகளுக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேத்தாகுடி வடக்கு, அரக்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிலைக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பேரவையின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், நாகை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஆர். கிரிதரன், தலைமை ஆசிரியர் இள.தொல்காப்பியன உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம் வடக்கு வீதியில், முத்தமிழ் இல்லம், ஆயக்காரன்புலம் வள்ளுவர் சாலை, மருதூர் வடக்கு ராஜாபுரம், வாய்மேடு உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேத்தாகுடி - வடக்கு, அரக்கரை பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பேரவையின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட நிகழ்வில் பங்கேற்றோர் .
 

முழு கட்டுரையைப் படிக்க →