தமிழ்நாடு

ஈரோட்டில் 14 சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை: தடையை மீறும் வாகனங்கள் பறிமுதல்

DIN

ஈரோடு: இன்று முழு ஊரடங்கையொட்டி ஈரோட்டில் உள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தடையை மீறிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா தாக்கம் மீண்டும் வேகமெடுத்து உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று 2-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க.. தாமதமாகும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: எப்போது வெளியாகும்?

ஈரோடு மாவட்டத்திலும் இன்று 2-வது முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்து போக்குவரத்தும் நடைபெறவில்லை. இதனால் முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை  சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

மேலும் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். முழு ஊரடங்கை யொட்டி இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,500 காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, பவானி லட்சுமிபுரம் சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, நொய்யல் ஆற்று சோதனை சாவடி என 14 சோதனை சாவடிகளிலும் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மட்டும் கடும் சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

இதைப்போல் திருமணம் விசேஷங்களுக்கு வருபவர்கள் வாகனங்களும் திருமண அழைப்புதழுடன் வந்ததால் அந்த வாகனம் அனுமதிக்கப்பட்டன. இன்று பலர் மருத்துவ தேவைக்காக வெளியே வந்ததாக கூறி அதற்கு உண்டான தகுந்த காரணத்தை கூறி வாகனங்களில் சென்றனர். அவர்களை காவலர்கள் அனுமதித்தனர். இதுதவிர தேவையின்றி வெளிய சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், ஜி.எச். ரவுண்டானா, காளைமாடு சிலை, ஸ்வஸ்திக் கார்னர் போன்ற முக்கியமான சாலைகளில் காவலர்கள் தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மேம்பாலங்களை காவலர்கள் தடுப்புகள் வைத்து அடைத்தனர். முக்கியமான கடைவீதி பகுதியில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கியமான சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், சித்தோடு ,பவானி ,அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உட்பட மாவட்டம் முழுவதும் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று முழு ஊரடங்கு என்றாலும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின.

ஈரோடு ரயில் நிலையத்தில் இன்று காலை ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்திருந்தனர். போக்குவரத்து எதுவும் இல்லாததால் நீண்ட தொலைவில் இருந்து நடந்தே வந்திருந்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT