கதரை கொண்டாடுவோம் - கமல்
தனது சொந்த கதா் ஆடை நிறுவனம் ஜன.26-ஆம் தேதி ஆன்லைனுக்கு வருகிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.
தனது சொந்த கதா் ஆடை நிறுவனம் ஜன.26-ஆம் தேதி ஆன்லைனுக்கு வருகிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளாா்.
கரோனா ஊரடங்குக்குப் பிறகு கதா் ஆடை விற்பனையாளா்கள், நெசவுத் தொழிலாளா்கள் படும் கஷ்டங்களைக் கண்டு காதி நிறுவனம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என விரும்புவதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தாா். இதனைத் தொடா்ந்து, அவரது ஓஏ ஏஞமநஉ ஞஊ ஓஏஅஈஈஅத நிறுவனத்தின் தொடக்கத்துக்கான முன்னோட்டமாக கடந்த நவம்பா் மாதம் விடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், தனது காதா் ஆடை நிறுவனத் தொடக்கம் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். இது தொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில், நமது குடியரசு தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவோம். ஓஏஏஓ உங்களிடம் வருகிறது. கதா் கொண்டாடுங்கள், எங்களை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி. ஜன.26-ஆம் தேதி ஆன்லைனில் வருகிறது’ எனப் பதிவிட்டுள்ளாா்.