சென்னை வானிலை மையத்திற்கு புதிய இயக்குநர் நியமனம்
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணனை நியமித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணனை நியமித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள செந்தாமரைக்கண்ணன், காலநிலை மாற்றம் மையத்தின் சென்னை மண்டல இயக்குநராக பணியாற்றி வந்தார்.
மேலும், வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றி வந்த புவியரசன், காலநிலை மாற்றம் மையத்தின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.