முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் ஒரேநாளில் 1,849 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,849 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,849 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

புதுவையில் சமீப காலமாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்று புதிதாக 1,894 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 1,42,559 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும்  3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் உயிரிழப்பு 1,896 ஆக உள்ளது. 

இதில், தற்போது 11,344 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரேநாளில் 895 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து, மொத்தம் 1,29,319 பேர் குணமடைந்துள்ளனர். 

மாநிலத்தில் இதுவரை  15,08,290 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.