தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. 

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 498 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில்  மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

இதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள், கட்சிக்கு தலா இருவர் வீதம் பங்கேற்றுள்ளனர்.

திமுக சார்பில் கிரிராஜன், சுந்தர், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல்; பாஜக சார்பில் கரு.நகாராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT