தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 28,561 பேருக்கு கரோனா பாதிப்பு!

தமிழகத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 7,520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மற்றொருபுறம், படுக்கை வசதிகளை விரிவுபடுத்தும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில் மாநிலம் முழுவதும் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவி வருவது ஒமைக்ரான் வகை தொற்று என்பதால் அதிகரித்த வேகத்திலேயே அது குறையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேவேளையில் மக்கள் நோய்த் தடுப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

சென்னை, கோவை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூா் மட்டுமல்லாது மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், ஆக்சிஜன் படுக்கைகளுக்கான அவசியம் அதிகம் எழவில்லை என கூறப்படுகிறது.

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, வியாழக்கிழமை மட்டும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 3,390 பேரும், செங்கல்பட்டில் 2,196 பேரும், கன்னியாகுமரியில் 1,148 பேரும், திருவள்ளூரில் 998 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 19,978 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 28 லட்சத்து 26,479-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 79,205 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 39 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,112-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT