கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை(ஜன.23) ஆம்னி பேருந்துகள் இயங்காது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

தமிழகத்தில் நாளை(ஞாயிறு) முழு ஊரடங்கு நாளில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் நாளை(ஞாயிறு) முழு ஊரடங்கு நாளில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா  நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை (ஜன. 23) ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசுப் பேருந்துகள் இயங்காத நிலையில், நாளை ஒருநாள் ஆம்னி பேருந்துகளும் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் (ஜன.24) முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல்,  எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மொபைல் செயலிகள் மூலமாக ஆட்டோ, டாக்சிகளை முன்பதிவு செய்து செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தைப்பூசம் அன்றும் இன்றும்...

தைப்பூசம் அன்றும் இன்றும்...

தென்காசியில் போதை ஒழிப்பு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

சிவகாசி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாதிரித் தோ்தல்!

SCROLL FOR NEXT