திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையை சனிக்கிழமை நேரில் பார்வையிடுகிறார் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து. 
தமிழ்நாடு

திருப்பூர் உழவர் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருப்பூர் உழவர் சந்தை, சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

DIN

திருப்பூர்: திருப்பூர் உழவர் சந்தை, சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமையில், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

'உழவர் சந்தை கடைகள் கட்டியதை வரவேற்கிறோம். ஆனால், உழவர் சந்தை கட்டடத்தில் கழிப்பிடம் கட்டாமல் இருக்கிறது. உள்ளே வரும் சாலை, கான்கிரீட் சாலையாக வருகிறது. வெளியே செல்லும் பகுதி பள்ளமாக இருக்கிறது. எனவே அதற்கு இணைப்புச் சாலை அமைக்க வேண்டும். இங்கு தேவையான அளவு விளக்குகள் அமைக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து நிர்வாகிகளுடன் சந்தை பேட்டை பகுதியில் சுற்றி பார்வையிட்டார். மாநிலப் பொருளாளர் இ.பால சுப்பிரமணியம், மாநிலச் செயலாளர் ஈஸ்வரன், பொங்கலூர் வட்டாரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, திருப்பூர் மாநகரச் செயலாளர் ஜீவா கிட்டு, மாநில ஊடகச் செயாலாளர் காடம்படி ஈஸ்வரன், வெள்ளியம்பாளையம் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT