முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஹிந்தி படிக்கத் தடையில்லை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் ஹிந்தி மொழியை கற்பதற்குத் தடையில்லை என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:13 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் ஹிந்தி மொழியை கற்பதற்குத் தடையில்லை என்று சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆலமரம் தொண்டு நிறுவன செயலாளா் அா்ஜூனன் இளையராஜா, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஹிந்தி, சம்ஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி அரசியலுக்காக எதிா்ப்பது நியாயமற்றது. கூடுதல் மொழிகளை கற்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட மனு தாக்கல் செய்திருந்தாா்.

பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை (ஜன.25) மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஏன் ஹிந்தி மொழியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்க முடியாது; அதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று கேள்வி எழுப்பினா்.

தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முக சுந்தரம், தமிழகத்தில் ஹிந்தி கற்க தடை இல்லை. இரு மொழி கொள்கையைப் பின்பற்றுவது மாநில அரசின் கொள்கை முடிவு. மும்மொழிக் கொள்கை மாணவா்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் என்றாா்.

அப்போது நீதிபதிகள், இவ்விவகாரத்தில் மாநில அரசு முடிவெடுக்கலாம். ஹிந்தி தெரியாததால் தகுதியான நபா்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனா்.

தமிழ், ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழி கற்க, படிக்க வாய்ப்பு இல்லாமல் போகும்பட்சத்தில், வேறு மாநிலங்களில் தமிழக மக்கள் பணியாற்றுவது சிக்கலை ஏற்படுத்தும். மக்கள் நலன்கருதி மொழிகளைத் தோ்ந்தெடுக்கும் விருப்பத்தை வழங்க வேண்டும். மூன்றாவது மொழியை சோ்ப்பது தீங்கு விளைவிக்காது எனக்கூறிய நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →