தமிழ்நாடு

ஆன்லைன் வழியிலேயே கல்லூரித் தேர்வுகள்

DIN

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போது பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. 

ஆலோசனைக்குப் பிறகு பிப்.1 முதல் 1-12-ம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. கல்லூரிகள் பிப்.1ஆம் தேதி முதல் திறக்கப்படுவதால் செமஸ்டர் தேர்வு எவ்வாறு நடைபெறும் என்கிற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்தது. 
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைனில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT