முகப்பு
தமிழ்நாடு

பணமோசடி வழக்கு: ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை காலை காவல்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
ராஜேந்திர பாலாஜி
பகிர்:

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை காலை காவல்துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3 கோடி மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஜாமினில் வெளிவந்தார்.

இந்நிலையில், மோசடி வழக்கு குறித்து விசாரணைக்கு ஆஜராக கோரி ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து, ஆஜரான ராஜேந்திர பாலாஜியிடம் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →