தமிழ்நாடு

தமிழ்நாட்டில் இன்று 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா

DIN



தமிழ்நாட்டில் புதிதாக 19,280 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,22,105 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 19,280 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 25,056 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 13 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் என மொத்தம் 20 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 31,09,526 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,564 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி1,98,130 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

  • சென்னை - 2,897
  • கோவை - 2,456
  • செங்கல்பட்டு - 1,430
  • ஈரோடு - 1,070
  • சேலம் - 1,101
  • திருப்பூர் - 1,425

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT