தமிழ்நாடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,157 கோடி ஒதுக்கீடு

DIN

உள்ளாட்சி அமைப்புகளுக்கான மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.1,157 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கான வளா்ச்சிப் பணிகளுக்கு, ரூ.1330 கோடியை ஒதுக்கித் தருமாறும், ரூ.665.42 கோடியை விடுவிக்குமாறும் ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அரசைக் கோரியுள்ளாா். இதைக் கவனமாக பரிசீலித்த அரசு, 5-ஆவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின்பேரில், 2021-22 ஆண்டுக்கான மூலதன மானிய நிதியாக ரூ.1,157 கோடியை ஒதுக்கீடு செய்கிறது. மேலும் நிதியின் முதல் தவணையாக ரூ.665 கோடியையும் விடுவிக்கிறது.

இதன் மூலம் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT