தமிழ்நாடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான்தான்: ஓ.பன்னீர்செல்வம்  

கட்சியின் சட்டவிதிப்படி தற்போதுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

DIN

கட்சியின் சட்டவிதிப்படி தற்போதுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார் திரௌபதி முர்மு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் முதலில் திரௌபதி முர்முவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துப் பேசினர். எடப்பாடி பழனிசாமியும், தனது ஆதரவை தெரிவித்தார். 

அப்போது, அரங்குக்குள் வந்த ஓ. பன்னீர்செல்வம், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் காத்திருந்தார். மேடையிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்றதும், மேடைக்குச் சென்று தனது ஆதரவை தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றினார். அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஓ. பன்னீர்செல்வம் மேடையில் ஏறாமல், தனித்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி கிளம்பும் வரை காத்திருந்து, பிறகு மேடையில் ஏறி, திரௌபதி முர்முவுக்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொண்டார். 

இந்த நிலையில் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு அளித்தபின் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், கட்சி சட்டவிதிகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் தொடர்கிறேன். குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறோம். முர்முவை அதிமுக சார்பில் சந்தித்து இதய பூர்வ ஆதரவை தெரிவித்தேன். அதிமுகவில் தற்போது வரை நான்தான் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT