விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: தேமுதிக
விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது.
விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம். அடுத்தவரின் உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பின் அதன்மூலம் ஆதாயம் தேடும் செயல்களை இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க- விஜயகாந்த் உடல் நிலையில் தொய்வு: பிரேமலதா
Advertisement
அனைவருக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவது சகஜம் தான். ஆனால் சொந்த ஆதாயத்திற்காக முற்றிலும் தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருவது வருந்ததக்க விஷயம். இனி இது போன்ற கீழ்த்தரமான விஷமத்தனமான அனைவரையும் குழப்பும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
கேப்டன் உடல்நிலை குறித்து தலைமை கழகம் வெளியிடும் அறிக்கையே உண்மையானது இறுதியானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.