வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயர்வு
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன. இதன்படி, தொடர்ந்து எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மே 7ஆம் தேதி முதல்முறையாக ஆயிரத்தைக் கடந்த வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 1,015ஆக இருந்தது. தொடர்ந்து மே 19ஆம் தேதி ரூ. 1,018.50ஆக அதிகரிக்கப்பட்டது.
இதையும் படிக்க | சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுர திருக்குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது!
இந்நிலையில், இன்று ரூ. 50 உயர்த்தப்பட்டதை அடுத்து சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 8.50 குறைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான விலை உயர்வு காரணமாக நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.