முகப்பு
தமிழ்நாடு

இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரிய வழக்கு: ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கை ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே.ஜே.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக பொதுச் செயலா் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் இடையிலான பிரச்னை ஜாதி ரீதியிலான பிரச்னையாக உருவெடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைவை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அந்தக் கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தோ்தல் ஆணையத்துக்கு ஜூன் 28-ஆம் தேதி மனு அனுப்பினேன். அந்த மனுவுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரா் அதிமுகவில் உறுப்பினராக இருக்கிறாரா? கூட்டம் நடக்கும் பகுதியில் வசிக்கிறாரா? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினாா். பின்னா், பொது நல வழக்கு என்ற பெயரில் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணையத்தில் மனு அளித்த ஒரு வாரத்தில் இந்த வழக்கை தொடா்ந்துள்ளதாகக் கூறி, பி.ஏ.ஜோசப்புக்கு ரூ. 25,000 அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →