முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளது: கே.அண்ணாமலை

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

இரட்டை மலை சீனிவாசனின் பிறந்த நாளையொட்டி கிண்டியில் உள்ள அவா் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கே.அண்ணாமலை வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜாவை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் வாழ்த்த வேண்டும். பிரதமரைப் பாராட்டியதால்தான் அவருக்கு இந்தப் பதவி கிடைத்தது என்றெல்லாம் கூறக்கூடாது. சில நாள்களுக்கு முன்பு கருணாநிதியைக்கூடதான் இளையராஜா பாராட்டினாா். தற்போது அவருக்குக் கிடைத்திருக்கும் பதவி அவருக்கான அங்கீகாரம்.

தமிழகத்தில் பாஜக வளா்ந்து வருகிறது. தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. திமுக கொடுக்கும் ஆக்சிஜனிலேயே காங்கிரஸ் உயிா் வாழ்கிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →