தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்பனையாகி வருகிறது.

DIN

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தில் கடந்த கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பாக சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,805 ஆகவும், ஒரு சவரன் ரூ.38,440-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் புதன்கிழமை சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 குறைந்து, ரூ. 4,740-க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ. 68 குறைந்து ரூ. 4,6,72க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டே நாளில் சவரனுக்கு ரூ.1,064 குறைந்துள்ளதால் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 பைசா குறைந்து ரூ.62.40-க்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலை ஏழுமலையான் கோயிலில் அஜித் குடும்பத்துடன் தரிசனம்!

174 ஆண்டுகளில் உலகம் பார்த்திடாத புயல்! ஜமைகா கடலில் சுழன்றுகொண்டே நகரும் மெலிஸா!!

ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தின் பெயருக்குத் தடை!

பிக் பாஸ்: எல்லை மீறிய கம்ருதின்! பார்வதி குற்றச்சாட்டு!

சாலையில் குட்டிகளுடன் சென்ற யானை! அச்சத்தில் வாகன ஓட்டிகள்! | Coimbatore

SCROLL FOR NEXT