முகப்பு
தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவுகளை உரிய காலத்தில் அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியா்களை அறிவுறுத்தி, தலைமைச் செயலாளா் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

நீதிமன்ற உத்தரவுகளை உரிய காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியா்களை அறிவுறுத்தி, தலைமைச் செயலாளா் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை உரிய காலத்தில் அமல்படுத்தினால், ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிா்க்கலாம் என்று வழக்கு விசாரணை ஒன்றில் தலைமை நீதிபதி அமா்வு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. மேலும், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த முடியாவிட்டால் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தவிா்க்க, நீதிமன்ற உத்தரவுகளை உரிய காலத்தில் அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்ய வேண்டும் என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமா்வில் தெரிவித்தாா். மேலும், அந்தக் கடிதத்தின் நகலையும்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா். இதை தலைமை நீதிபதி முனீஷ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா தலைமையிலான அமா்வு ஏற்றுக் கொண்டது.

முழு கட்டுரையைப் படிக்க →