முகப்பு
தமிழ்நாடு

கிண்டி பகுதியில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம்

 சென்னை கிண்டி பகுதியில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

 சென்னை கிண்டி பகுதியில் இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிண்டி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஹோட்டல் ஹப்லிஸ் அருகே உள் பக்கமாக செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினரால் நிரந்தர மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் அந்தப் பகுதியில் ஜூலை 9-ஆம் தேதி (சனிக்கிழமை), ஜூலை 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம், சனிக்கிழமை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரையிலும் அமலில் இருக்கும்.

போக்குவரத்து மாற்றத்தின்படி விமான நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலையில் வரும் வாகனங்கள், கத்திப்பாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க. தொழிற் பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் சென்று அண்ணா சாலை செல்ல வேண்டும்.

அதேபோல, பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதும் இன்றி வழக்கமான சாலையில் (கத்திப்பாரா வழியாக) செல்லலாம். வடபழனியிலிருந்து வரும் வாகனங்கள் 100 அடி சாலை சிப்பெட் சந்திப்பில் இடது புறம் திரும்பி திரு.வி.க. தொழில் பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் சென்று அண்ணா சாலைக்கு செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →