தமிழ்நாடு

சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை: அமைச்சர் ரகுபதி

சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு மற்றும் 14 இடங்களில்  லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்

ஆர்.காமராஜ் அமைச்சராக இருந்த 7.4.2005 ஆம் ஆண்டு முதல் 31.3.2021 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.44 கோடி (500%) சொத்து சேர்த்திருப்பதாக வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள காமராஜ் வீட்டிற்கு இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை  லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் முதல்வருக்கு இல்லை.  புகாரின் அடிப்படையில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

திமுகவில் நிலவி வரும் குழப்பத்திற்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்த பின்புதான் சோதனை நடத்துகின்றனர். தகுந்த முகாந்திரம் இல்லாமல் எதையும் செய்யவில்லை என  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நலம் விசாரித்த செந்தில் பாலாஜி

முதல் போட்டியிலேயே வரலாறு படைத்த இந்திய மகளிரணி; இலங்கைக்கு 271 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT