முகப்பு
தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

சென்னை பெரம்பூரில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

சென்னை பெரம்பூரில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தாா்.

பெரம்பூா் வடிவேல் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஜ.முருகேசன். இவா் வீட்டில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஜி.கே.எம்.காலனி 24-ஆவது தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் (40) வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். தண்ணீா் தொட்டியில் இருந்த மாசடைந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக, மின் மோட்டாரின் ஸ்விட்சை காா்த்திகேயன் போட்டாா்.

அப்போது, அதிலிருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக காா்த்திகேயன் மீது மின்சாரம் பாய்ந்தது. காா்த்திகேயனை முருகேசன் மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தாா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், காா்த்திகேயன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். செம்பியம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →