தமிழ்நாடு

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

DIN

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 இடங்களுக்கு இன்று இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அவற்றில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைதேர்தலானது இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கிராமப்புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என 498 இடங்களும் நகர்ப்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என 12 பதவிகளும் காலியாக உள்ளன. 

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 வரை நடைபெற உள்ளது, மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

அதிமுகவில் உள்கட்சி பூசல் இருந்து வருவதால் விண்ணப்பத்தில் கையெழுத்திட முடியாத சூழ்நிலையால், அதிமுகவினர் சுயேச்சை சின்னங்களில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT