தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

DIN

நாளை பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்! 

'அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும் கரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, தியாகப் பெருநாளைப் பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் பலன்தராத போக்குவரத்து வாரவிழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடரும் விதிமீறல்; கண்டுகொள்ளுமா காவல்துறை?

செயற்கை நுண்ணறிவுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டம் சீரமைக்கப்படும்- மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

அவிநாசி அரசுக் கல்லூரியில் 316 மாணவா்களுக்கு மடிக்கணினி

இன்று தொடங்குகிறது யு-19 உலகக் கோப்பை

கடையநல்லூா் நகராட்சியின் அனைத்து வாா்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீா்: நகா்மன்றத் தலைவரிடம் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT