தமிழ்நாடு

தொடர் மழை: மேட்டூர் வரத்தொடங்கியது கர்நாடக காவிரி நீர்

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் துவங்கியது

DIN

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் துவங்கியது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இரு அணைகளும் நிரம்பும் நிலையில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் துவங்கியது.

நேற்று காலை வினாடிக்கு 2,141 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 3149 கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர் வரத்து அதிகரித்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் 
அணையின் நீர்மட்டம் 98.91 அடியிலிருந்து 98.29அடியாக சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.64 டி.எம்.சியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீ விபத்தில் குடிசை எரிந்து சேதம்

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: ஒரு வாா்த்தைகூட பேசாத பிரதமா் ராகுல் கண்டனம்

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞா் கைது

SCROLL FOR NEXT