தமிழ்நாடு

நீட் தேர்வு: நாளை முதல் நுழைவுச் சீட்டு பெறலாம்

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை (ஜூலை 11) முதல் நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் நாளை (ஜூலை 11) முதல் நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் 17ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு neet.nta.nic.in என்ற முகவரியில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 543 நகரங்களில் நடைபெறவுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தமிழ், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். 

10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள் 12 மூன்றாம் பாலினத்தவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 31,803 பேர் தமிழ் மொழியில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். 

நுழைவுச் சீட்டு மூலம், மாணவர்கள் தேர்வு மையங்கள், இடம் தொடர்பான விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும். இப்போது நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் தொடர்பான விவரங்களை இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அந்தந்த தேர்வு மையத்தில் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT