சசிகலா 
தமிழ்நாடு

அதிமுக தொண்டர்கள் எனது தலைமையையே விரும்புகின்றனர்: சசிகலா

அதிமுக தொண்டர்கள் எனது தலைமையையே விரும்புகின்றனர் என்று வி.கே. சசிகலா கூறியுள்ளார். 

DIN

அதிமுக தொண்டர்கள் எனது தலைமையையே விரும்புகின்றனர் என்று வி.கே. சசிகலா கூறியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண நிகழ்வில் வி.கே.சசிகலா திங்கள்கிழமை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதே கேள்விக்குறியாக உள்ளபோது, ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது எப்படிச் செல்லும்? 

பொதுக்குழுவில் பொருளாளரே நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆகையால், பொதுக்குழுக் கூட்டம் நடந்ததே செல்லாது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள், கலவரம் செய்து, பதவியைப் பிடிக்கும் சுயநலக் குழுக்களாக செயல்படமாட்டார்கள். 

அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் என்னையே ஆதரிக்கின்றனர். விரைவில், கட்சியிலிருந்து வெளியில் சென்றவர்கள், அதிருப்தியாளர்கள் அனைவரையும்  ஒருங்கிணைத்து, ஒரே தலைமையின் கீழ் கொண்டுவந்து, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

வழிகாட்டுதல் அறிக்கை

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

SCROLL FOR NEXT