அதிமுக பொதுக்குழு நடக்குமா? எடப்பாடி பழனிசாமி பதில் மனுவால் பரபரப்பு 
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழுவை இன்று திங்கள்கிழமை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

DIN

அதிமுக பொதுக்குழுவை இன்று திங்கள்கிழமை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதிமுகவின் பொதுக்குழு விவகாரம் குறித்து ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் உத்தரவு பிறப்பித்தது. 

அதில், அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். 

பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளதால் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை நிராகரித்துடன், கட்சி விதிகளுக்கு உள்பட்டு அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டும். அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த கூடுதல் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். 

ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என கடந்த 23 ஆம் தேதி தேதியே பொதுக்குழு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT