சென்னை ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கான நோட்டீஸ் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இந்த நோட்டீசை மயிலாப்பூர் வட்டாச்சியர் நந்தினி வழங்கினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் வெடித்தது.
இதையும் படிக்க- அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்
இச்சம்பவம் காரணமாக அதிமுக தலைமை அலுவலுகத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேலும் அதிமுக தலைமைக்கழக அலுவலகம் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.