தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் நலம்பெற ஓ. பன்னீர்செல்வம் பிரார்த்தனை

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் வலுத்திருக்கும் நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கி பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினருக்கு இடையே நடந்த மோதலால், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் சீல்வைத்துள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக சுட்டுரையில் கூறியுள்ளார் ஓ. பன்னீர்செல்வம்.

அந்த பதிவில், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். முக ஸ்டாலின் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுட்டுரைப் பதிவு மூலம் தெரியப்படுத்தினார்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவு: செவ்வாய்க்கிழமை உடற்சோா்வு சற்று இருந்தது. பரிசோதனை செய்ததில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக் கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT