தமிழ்நாடு

சென்னையில் ஆக. 6 முதல் இயற்கை விவசாயப் பொருள்காட்சி

DIN

இயற்கையான விவசாயப் பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சென்னையில் வருகிற ஆகஸ்ட் 6 முதல் 10  ஆம் தேதி வரை இயற்கை விவசாயப் பொருள்காட்சி நடைபெற உள்ளது. 

சென்னை போரூரில் உள்ள ராஜ்மஹால் திருமண மண்டபத்தில் மேற்குறிப்பிட்ட நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது.

பொருள்காட்சியில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள், விதைகள், பனைப் பொருள்கள், பதநீர், சித்த மருத்துவப் பொருள்கள், மண்பாண்டப் பொருள்கள், நெசவுப் பொருள்கள், கடல் உணவுப் பொருள்கள், ஆயத்த ஆடைகள், சுருள்பாசி உற்பத்திப் பொருள்கள், பல்துறை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் கிடைக்கும். 

மேலும், கழிக்கப்பட்ட பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆக்கப் பொருள்கள், பனைக் கழிவிலிருந்து தயாரிக்கும் ஆக்கப் பொருள்கள், மக்கள் பயன்பாட்டுப் பொருள்கள், பலதரப்பட்ட கைவினைப் பொருள்கள், 40 வகையான அரிசிகள், சீனித்துளசி உற்பத்திப் பொருள்கள், அறிவியல் நூல்கள், கடல்பாசி உற்பத்திப் பொருள்கள் ஆகியவையும் அரங்கில் கிடைக்கும்

தமிழகத்திலுள்ள 112 இலங்கைத் தமிழர்களின் முகாம்களில் உள்ள தொழில் முனைவோர்கள் உற்பத்தி செய்த கைவினைப்பொருள்கள், பேக்கரி வகைகள் உள்ளிட்டவையும் இங்கே விற்பனை செய்யப்படவுள்ளது. 

அதுபோல மாற்றுத் திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோரின் உற்பத்திப் பொருள்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் பொருள் வாங்க வருவோர் அனைவரும் நெகிழிப் பை தவிர்த்து துணிப் பைகள் கொண்டுவரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுதவிர அரங்கில் பொருள்கள் வாங்குவோருக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் இயற்கையான காய்கறி, மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கு வழிகாட்டப்படும் என்றும் இந்தப் பொருள்காட்சிக்கு ஏற்பாடு செய்துவரும் பண்டைத் தமிழர்களின் பாரம்பரியத்தை மேம்படுத்தும் நோக்கிலான உட்லா டிரஸ்ட் நிறுவனர் கே.கே. ரவீந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்த பொருள்காட்சியில் குறைந்த கட்டணத்தில் அரங்குகள் வழங்கப்பட உள்ளது என்றும் பங்குபெற விரும்பும் தொழில் முனைவோர் 99629 58434 என்ற எண்ணில் வரும் 25 ஆம் தேதிக்குள் தொடர்புகொள்ளுமாறும் ரவீந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT