தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்தில் காற்று மழை: சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

DIN

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து வலுத்து வருகிறது. தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக 50-க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உதகை. குந்தா கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளது மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில்...
கூடலூர் 181 மி.மீ,  மேல் கூடலூர் 161 மி.மீ, தேவாலா 149 மி.மீ, மேல் பவானி 132 மி.மீ, அவலாஞ்சி 122 மி.மீ, பந்தலூர் 102 மி.மீட்டர் என பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT