தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் தில்லி பயணம்: மோடியுடன் சந்திப்பு

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் தில்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் நிகழ்விற்கு முறைப்படி அழைப்பு விடுக்கவுள்ளார்.

இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடைபெறவுள்ளன. இந்த போட்டியின் தொடக்க விழா, நிறைவு விழாக்கள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த வாரம் தில்லி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT