இரண்டாவது நாளாக அகற்றப்படாமல் உள்ள கூடலூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே உள்ள நூலக கட்டடத்தின் முன்பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு. 
தமிழ்நாடு

கூடலூர் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு: 2-வது நாளாக அகற்றப்படாத அவலம்

கூடலூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே  உள்ள நூலக கட்டடத்தின் முன்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை இரண்டாவது நாளாக அகற்றப்படாததால் வாகன நெரிசல் அதிகமுள்ள குறுகிய சாலையில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். 

DIN


கூடலூர்:  கூடலூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே  உள்ள நூலக கட்டடத்தின் முன்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை இரண்டாவது நாளாக அகற்றப்படாததால் வாகன நெரிசல் அதிகமுள்ள குறுகிய சாலையில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். 

நீலகிரியில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வரும் நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும், தொடர் கனமழையால் பரவலாக வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய் இரவு பெய்த கன மழைக்கு கூடலூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே  உள்ள நூலக கட்டடத்தின் முன்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இதனால் அந்த பகுதியில் உள்ள நடைபாதை பாதை தடைபட்டதால் வாகன நெரிசல் அதிகமுள்ள குறுகிய சாலையில் பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம் இன்னும் அங்குள்ள இடிபாடுகளை அகற்றப்படாததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் விரைந்து இடிபாடுகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT