நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் 
தமிழ்நாடு

நன்னிமங்கலம் மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் ஆனி மாத பெளர்ணமி வழிபாடு!

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர்  திருக்கோயிலில் ஆனி மாதப் பெளர்ணமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர்  திருக்கோயிலில் ஆனி மாதப் பெளர்ணமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

குபேர பெருமானின் குமாரர்கள் மணிக்ரீவன், நளகூபன்  ஆனி மாதப் பெளர்ணமியன்று  இறைவன் - இறைவியை வழிபட்டு, பொன் வில்வ சாரத்தின் மகிமையை உணர்ந்தது இத்திருக்கோயிலில் தான். மேலும் குபேர பெருமானும் இக்கோயில் இறைவனை வழிபட்டுள்ளார்.

பணம், நகைகள் மீதான தோஷங்களை நீக்கி, செல்வ வளத்தை பெருக்கும் பரிகாரத்தலமான இக்கோயிலில் ஆனி மாதப் பெளர்ணமி நாளான புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, அருள்மிகு சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன், குபேரப் பெருமானின் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரத்துக்குப் பிறகு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன.

இந்த பெளர்ணமி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் என்.சியாமளா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விபத்து

SCROLL FOR NEXT