தமிழ்நாடு

நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார்

DIN

நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான பிரதாப் போத்தன்(69) வெள்ளிக்கிழமை காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

பிரதாப் போத்தன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத்  தெரிவித்து வருகின்றனர். 

நடிகர், இயக்குநர், திரைக்கதை  எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக தன்மைக் கொண்ட பிரதாப் போத்தன் 1980-களில் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.

1978 ஆம் ஆண்டு இயக்குநர் பரதனின் ஆரவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தகரம், ஆரோகணம், தன்மாத்ரா, 22 பெண் கோட்டயம் மற்றும் பெங்களூர் டேஸ் ஆகியவை அவரது பிரபலமான மலையாளத் திரைப்படங்களில் சில. ரித்துபேதம், டெய்ஸி, ஒரு யாத்ரமொழி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக மம்முட்டி நடித்த 'சிபிஐ5: தி பிரைன்' படத்தில் நடித்தார்.

தமிழில் மீண்டும் அழியாத கோலங்கள், மூடுபனி, இளமைக் கோலம், வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, கரையெல்லாம் செண்பகப்பூ, மதுமலர், குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள், சொல்லாதே யாரும் கேட்டால், நெஞ்சில் ஒரு முள், வா இந்த பக்கம், தில்லு முல்லு, ராணி, பனிமலர், அபர்ணா, வாழ்வே மாயம், அம்மா, எச்சில் இரவுகள், ஒரு வாரிசு வருகிறது, சட்டம் சிரிக்கிறது, நன்றி மீண்டும் வருக, யுத்த காண்டம், புதுமைப் பெண், மீண்டும் ஒரு காதல் கதை, சிந்து பைரவி, மனைவி ரெடி, ஜல்லிக்கட்டு, பேசும் படம், என் ஜீவன் பாடுது, பெண்மணி அவள் கண்மணி, ராம், படிக்காதவன், ஆயிரத்தில் ஒருவன், சர்வம், அலெக்ஸ் பாண்டியன், பூஜை, ரெமோ, பொன்மகள் வந்தாள், கமலி ஃப்ரம் நடுக்காவேரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன் மீண்டும் ஒரு காதல் கதை, ருத்ர பீடம், ஜீவா, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி ,லக்கி மேன் உள்ளிட்ட பல படங்களை இவர் இயக்கியுள்ளார்.  மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றுள்ளார்.

சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது , சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, கேரளம் மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.  

மோகன்லால் படமான 'பரோஸ்: கார்டியன் ஆஃப் டி'காமா'ஸ்' டிசரிலும் பிரதாப் போத்தன் நடித்தார்.

மலையாளத்தில் ரிதுபேதம், டெய்சி மற்றும் ஒரு யாத்ரமொழி ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார். 'கிரீன் ஆப்பிள்' என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

பிரதாப் போத்தன் நடிகை ராதிகாவை 1985 -இல் திருமணம் செய்து 1986 இல் விவாகரத்து செய்தார். பின்னர் 1990 -இல் அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்தார். 2012 இல் அவரையும் விவாகரத்து செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT