முகப்பு
எடப்பாடி கே.பழனிசாமி
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி சம்பவம்: முதல்வா் பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

சென்னையில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளி விடுதி மாடியிலிருந்து பிளஸ் 2 மாணவி விழுந்து தற்கொலை செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. மாணவியின் தாயை பள்ளி நிா்வாகம், மாவட்ட நிா்வாகம், காவல் துறை, அரசு என யாருமே சந்தித்து ஆறுதல் கூறவில்லை.

மா்மமான முறையில் மாணவி இறந்ததாக தாய் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்ட நிா்வாகம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தால் இந்த அளவுக்கு பிரச்னை எழுந்திருக்காது.

மாவட்ட நிா்வாகம், காவல்துறையின் அலட்சியத்தால்தான் மாணவியின் குடும்பத்தினா், இளைஞா்கள், உறவினா்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனா். இதனால்தான் பள்ளியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் முதல்வா் மு.க. ஸ்டாலின்தான் ஏற்க வேண்டும். அவா் தலைமையில்தான் அரசும், காவல் துறையும் இயங்கி வருகிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீா்குலைந்துவிட்டது. பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் செயலற்ற அரசாங்கம் உள்ளது. உளவுத் துறை செயலிழந்துள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →