கலவை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே மழையூர் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மாசிலாமணி இவரது மகன் பார்த்திபன்(எ) பார்த்தசாரதி(36) இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் எழுச்சி பேரவை ஆற்காடு தொகுதி செயலாளராக உள்ளார்.
பார்த்தசாரதி ஞாயிற்றுக்கிழமை காலை மழையூர் கிராமத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் செய்யாதுவண்ணம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள விவசாய நிலத்தில் கை, கழுத்து, கால் முட்டி என பல இடங்களில் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.
இதையும் படிக்க | கூத்தாநல்லூர்: நீட் தேர்வுக்கு மூக்குத்தி கழற்ற முடியாமல் மாணவிக்கு மூக்கில் ரத்தம்
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலவை போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பார்த்தசாரதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.