முகப்பு
தமிழ்நாடு

மேலும் 649 பேருக்கு கரோனா பாதிப்பு

 தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 649 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

 தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 649 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 4.06 சதவீதமாகப் பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,46,313-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,297-ஆக உள்ளது. தில்லியில் புதன்கிழமை மொத்தம் 15,974 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நகரில் புதன்கிழமை 686 பேருக்கு தொற்று பாதிப்பும், 4.74 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,488 கரோனா படுக்கைகளில் 130 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. நகரில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 186-ஆக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.