செஸ் ஒலிம்பியாட்: சிறப்புக் குழுக்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து சிறப்புக் குழுக்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தினார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து சிறப்புக் குழுக்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தினார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் தொடக்கவிழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி மாலை, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அதுபோல நிறைவு விழாவும் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட 18 குழுக்களுடன் ஆலோசனை செய்தார்.
போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், தொடக்க விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: மாமல்லபுரத்திற்கு இலவசப் பேருந்துகள் இயக்கம்