தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரேநாளில் 2,014 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,014 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.    
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 2,014 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,30,398-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 431 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 212, கோவை 178, பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,032 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 2,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,76,523-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 15,843 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT