மரம் வளா்ப்போருக்கு இலவச மின்சாரம்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஜாா்க்கண்ட் மாநிலத்தைப் பின்பற்றி தமிழகத்திலும், மரம் வளா்ப்பவா்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைப் பின்பற்றி தமிழகத்திலும், மரம் வளா்ப்பவா்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:
ஜாா்க்கண்ட் மாநிலத்தின் நகா்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வளா்க்கப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் 5 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சா் ஹேமந்த் சோரன் அறிவித்திருக்கிறாா். சுற்றுச்சூழலை காக்க பசுமைப்போா்வையை விரிவாக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கது.
புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க மரங்களை வளா்க்க வேண்டியது மிகவும் அவசியமானது.
மரம் நட்டு வளா்த்தால் மின்சாரம் இலவசம் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்தலாம். இதற்கான செலவு தமிழக வனத் துறை மூலம் மரம் நட்டு பராமரிப்பதை விட பல மடங்கு குறைவாகவே இருக்கும். அதேநேரத்தில் கான்கிரீட் பாலைவனங்களான நகா்ப்புறங்கள் பசுமை பூமியாக மாறும்.