மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம்: சென்னையில் 2,000 முகாம்கள்
தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து முகாம்களிலும் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் அதிக அளவு கரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்களும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களும் முகாம்களில் சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.