தமிழ்நாடு நுகர்வோர் பொருள்கள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் மோகன் சங்கர் 
தமிழ்நாடு

ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகம்: தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து போராட்டம் நடத்த திட்டம் 

ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாக நுகர்வோர் பொருள்களுக்கு விலையைக் குறைத்து வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக வரும் டிசம்பரில் போராட்டம்

DIN

ஈரோடு: ஆன்லைன் வர்த்தகத்திற்கு சாதகமாக நுகர்வோர் பொருள்களுக்கு விலையைக் குறைத்து வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக வரும் டிசம்பரில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்வோர் பொருள்கள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் மோகன் சங்கர் மற்றும் தலைவர் எம். வெங்கடேஷ் கூறினர்.

கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  சில தயாரிப்பு நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு குறைந்த விலையிலும் பாரம்பரிய விநியோகஸ்தர்களுக்கு அதிக விலையிலும் பொருள்களை வழங்குகின்றன. இது தொடரும் எனில் வரும் டிசம்பரில் கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெறுவதற்கு முன்போ அல்லது பின்போ சில்லறை வணிகர்களுடன் இணைந்து  மாநில அளவில் அந் நிறுவனங்கள் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும். 

மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும், வணிகர் நல வாரியத்தால் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகப்படுத்த வேண்டும், ஆன்லைன் வணிகத்தை முறைப்படுத்த மத்திய அரசு ஒரு குழு அமைக்க வேண்டும், சேதமடைந்த மற்றும் காலாவதியான பொருள்களை திரும்ப பெறாத நிறுவனங்களை புறக்கணிப்போம், விநியோகஸ்தர்களின் செலவினங்கள் மிக அதிக அளவில் உள்ளது. எனவே, லாப விகிதத்தை விநியோகஸ்தர்களுக்கு அதிகரிக்க வேண்டும், சேல்ஸ்மேன் சம்பளம் வாகனச் செலவு போன்றவைகளை தயாரிப்பு நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும். 

டாபர் நிறுவனம் தொடர்ந்து விநியோகஸ்தர்கள் விரோத போக்கை கடைபிடித்தால் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும். மேரிகோ நிறுவனம் பெரிய கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் நேரடியாக சப்ளை செய்யும் திட்டத்தை அமல்படுத்தினால் அந்த தயாரிப்பு நிறுவன பொருள்களை புறக்கணிப்போவதாக அவர்கள் கூறினர்.

மாநில கௌரவ ஆலோசகர்கள் ஜெகதீசன் காதர் முகைதீன் துணைத் தலைவர் எஸ். ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரம்பரிய உணவுகளுடன் உணவுத் திருவிழா: நாளை தொடக்கம்! முழு விவரம்!

Middle Class Movie Review | கோடீஸ்வரர் ஆனாரா மிடில் கிளாஸ்? - திரை விமர்சனம் | MunishKanth

மதுரையின் வளர்ச்சிக்கு எதிரான தடைகளைத் தகர்த்தெறிவோம்! - முதல்வர் ஸ்டாலின்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் மாநாடு: பிரேமலதா

சென்னையில் 2 மாதங்களுக்குள் வருகிறது டபுள் டக்கர் பேருந்து?

SCROLL FOR NEXT