தமிழ்நாடு

நீரஜ் சோப்ராவுக்கு ராமதாஸ் வாழ்த்து

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஈட்டி எரிதல் பிரிவில் இந்திய வீரா் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டா் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறாா். அவரது சாதனைக்கு வாழ்த்துகள்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் சாதிப்பது இந்தியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. இதற்கு முன்பு கடந்த  2003-ஆம் ஆண்டு நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் பதக்கம் வென்றிருந்தார். அதன் பிறகு இப்போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லாத நிலையில், 18 ஆண்டுகளுக்கு பின் 23 வயதான நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைக்கப்பட்டிருப்பது இந்தியா்களுக்கு பெருமையளிக்கும் விஷயம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT