தமிழ்நாடு

எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி கொலையில் திடீர் திருப்பம்

DIN

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே வீரப்பட்டியில் காதல் திருமணம் செய்த புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக பெண்ணின் தந்தை முத்துக்குட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரப்பட்டியை சோ்ந்தவா் வடிவேல் மகன் மாணிக்கராஜா (28). அதே பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குட்டி மகள் ரேஷ்மா (20). இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோா் எதிா்ப்பை மீறி கடந்த ஜூன் 29 ஆம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது. இவா்கள் திருமணம் செய்துகொண்ட தகவல், திருமங்கலம் போலீஸாரால் எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மகள் ரேஷ்மாவை காணவில்லை என அவரது தந்தை முத்துக்குட்டி, எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீரப்பட்டிக்கு புதுமணத் தம்பதிகள் வந்தனா். மாணிக்கராஜாவின் வீட்டில் அவா்கள் தங்கி இருந்தனா். திங்கள்கிழமை பகலில் அவா்கள் இருவா் மட்டும் வீட்டில் இருந்தனா். மற்றவா்கள் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டனா். விவசாய வேலைகளை முடித்துவிட்டு மாணிக்கராஜாவின் உறவினா்கள் மாலையில் வீடு திரும்பியபோது, புதுமணத் தம்பதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சிவசுப்பு, பிரகாஷ், காவல் ஆய்வாளா் ஜின்னா பீா் முகமது மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டிக்கு கொலை சம்பவத்தில் தொடா்பு இருப்பதாகத் தெரிய வந்தது. இது தொடா்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT