தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை: பெரியார் பல்கலை. பதிவாளர் பணியிடை நீக்கம்

DIN

சேலம்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
சேலத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில்  கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து, பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) பேராசிரியர் கோபி (45). இவர் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். சேலம், சித்தர் கோயில் பகுதியை சேர்ந்த பிஎச்டி பயிலும் மாணவிக்கு  பதிவாளர் கோபி நெறியாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 24சஆம் தேதி ஆய்வுக்கட்டுரை சரி பார்க்க வேண்டி, மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்புக்கு பதிவாளர் கோபி அழைத்து, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கருப்பூர் காவல் நிலையத்தில், மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவாளர் கோபியை காவல் துறையினர் கைது செய்து, நேற்று முன் தினம் இரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து,  சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், பாலியல் தொல்லை வழக்கில் சிக்கி கைதான, பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT